
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
நடிகை ஸ்ரேயா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்து, இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு இசை படத்தில் நடிக்கிறார்கள். 'மியூசிக் ஸ்கூல்' என பெயரிடப்பட்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று (மார்ச் 28) வெளியானது.
அதில், கோவாவின் அழகிய பின்புலத்தில், ஸ்ரேயாவும், குழந்தைகளும், காரில் பயணிப்பது போன்று இருந்தது.
இளம் பள்ளிக் குழந்தைகள், தற்போதுள்ள கல்வி முறையின் அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றி பேசும் படமாக இது இருக்கும் எனக்கூறப்படுகிறது.
இப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இருக்கிறதென்றும், படத்தில் இசையும் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல மொழிகளில் உருவாகும் இந்த இசைப்படம், இந்தாண்டு மே மாதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
'மியூசிக் ஸ்கூல்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்
SHRIYA SARAN - SHARMAN JOSHI: ‘MUSIC SCHOOL’ FIRST LOOK OUT NOW... #FirstLook of #MusicSchool - with music by maestro #Ilaiyaraaja - is out now… Filmed in #Hindi and #Telugu, it will be dubbed in #Tamil… In *cinemas* 12 May 2023. pic.twitter.com/3Jb5TCioA8
— taran adarsh (@taran_adarsh) March 28, 2023