இசை, காதல் மற்றும் ஒரு நீண்ட பயணம்: அஜித் குமாருடன் காரில் பயணிக்கும் அழகிய வீடியோவை பகிர்ந்த ஷாலினி
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதியான நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி ஆகியோரின் அழகிய கார் பயண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வெள்ளை நிறச் சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் குமார் காரை ஓட்டிச் செல்கிறார். அருகில் அமர்ந்திருக்கும் ஷாலினி அழகிய புன்னகையுடன் அதனைச் செல்ஃபி வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
Music, love & a long drive
ஷாலினி நெகிழ்ச்சி பதிவு
பின்னணியில் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் 'என்ன தான் நல்லா இருந்தா என் தலைமேல கொஞ்சம் நில்லு மச்சான்' என்ற துள்ளலான பாடல் ஒலிக்க, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அஜித் கவனமாகக் காரை இயக்குவதும், இடையிடையே கேமராவைப் பார்த்து மெல்லிய புன்னகை புரிவதும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவிற்கு "Music, love & a long drive... ❤️❤️❤️" (இசை, காதல் மற்றும் ஒரு நீண்ட பயணம்) என ஷாலினி தலைப்பிட்டுள்ளார்.
வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, "எவர்கிரீன் ஜோடி" என ரசிகர்களின் அன்பான கருத்துகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
When #AjithKumar and #ShaliniAjithKumar go for a drive together! pic.twitter.com/n4jirLcxKF
— Chennai Times (@ChennaiTimesTOI) November 21, 2026