
தான் 90 சதவிகிதம் குணமாகி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்க போவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்
செய்தி முன்னோட்டம்
'பிச்சைக்காரன் 2 ' படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, ஒரு விபத்தில் சிக்கி, காயம் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னைக்கு அறுவை சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட விஜய் ஆண்டனி, தற்போது 90 சதவிகிதம் குணமாகி விட்டதாக கூறியுள்ளார்.
ட்விட்டரில் இது குறித்து ட்வீட் செய்து இருந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, "அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன," என்று தெரிவித்துள்ளார்.
"என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி," என்று பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
படப்பிடிப்பை துவங்க போகும் விஜய் ஆண்டனி
அன்பு இதயங்களே
— vijayantony (@vijayantony) February 2, 2023
நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்😊
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்🙏
அன்புக்கு நன்றி