
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து-பலத்த காயத்தில் இருந்து குணமடையும் விஜய் ஆண்டனி
செய்தி முன்னோட்டம்
கடந்த 2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான படம் தான் 'பிச்சைக்காரன்'.
இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றதோடு, விஜய் ஆண்டனிக்கு ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது.
இதனையடுத்து, இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தினை அவரே இயக்கியும் வருகிறார் என்பது குறிப்பிடவேண்டியவை.
இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து கொண்டிருந்தது.
அப்போது படப்பிடிப்பில் அவருக்கு எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியானது.
பெரிய அறுவை சிகிச்சை
'குணமடைந்து வருகிறேன்' என பதிவு செய்த விஜய் ஆண்டனி
தற்போது சென்னையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி தனது உடல்நலம் குறித்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் அவர், 'அன்பு நண்பர்களே, மலேசியாவில் 'பிச்சைக்காரன்-2' படப்பிடிப்பின் பொழுது ஏற்பட்ட விபத்தில் தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்தில் இருந்து நான் குணமடைந்து வருகிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.
மேலும், தற்போது தான் ஒரு பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைவருடன் பேசுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ரசிகர்கள் அனைவரின் ஆதரவுக்கும், தனது உடல்நிலையில் அக்கறை காட்டியதற்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.