அடுத்த செய்திக் கட்டுரை

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மொரிஷியஸில் வைத்து தனது தந்தை இளையராஜாவை சந்தித்தார்
எழுதியவர்
Sindhuja SM
May 05, 2024
10:12 am
செய்தி முன்னோட்டம்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மொரிஷியஸில் வைத்துதனது தந்தையும், பழம்பெரும் இசையமைப்பாளருமான இளையராஜாவை சந்தித்தார்.
மொரிஷியஸில் வைத்து நடைபெறும் இளையராஜாவின் இசை கச்சேரிக்கு முன்னதாக அவர்கள் சந்தித்து கொண்டனர்.
அந்த தருணத்தின் புகைப்படங்களையும் அந்த இசை மேஸ்ட்ரோக்கள் இணையத்தில் பகிர்நதுள்ளனர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள இளையராஜா, "யுவன் மொரிஷியஸ் (sic) வந்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
யுவன் ஷங்கரும் எந்த தலைப்பும் இல்லாமல் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.
இசைஞானி இளையராஜா மொரிஷியஸின் SVCC, Pailles இல் வைத்து மே 4 ஆம் தேதி இசைக்கச்சேரி நடத்த உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
இளையராஜா பகிர்ந்த புகைப்படம்
Yuvan came to Mauritius pic.twitter.com/3XDBQAa8wG
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 3, 2024