Miss Universe 2025 ஆக மெக்ஸிகோவின் பாத்திமா மகுடம் வென்றார்; சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி!
செய்தி முன்னோட்டம்
தாய்லாந்தில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டி (Miss Universe) 2025 -இல், மெக்சிகோவின் பாத்திமா போஷ் மகுடம் வென்றார். இந்தியாவின் மணிகா விஸ்வகர்மாவால் முதல் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை. மேலும், போட்டியின் நான்காவது ரன்னர் அப்பாக, கோட் டி ஐவரி அழகியும், மூன்றாவது ரன்னர் அப்பாக பிலிப்பைன்ஸ் அழகியும், இரண்டாவது ரன்னர் அப்பாக வெனிசுலா அழகியும், முதல் ரன்னர் அப்பாக தாய்லாந்து அழகியும் தேர்வானார்கள். இதில், இந்தியப் பிரதிநிதி மனிகா விஸ்வகர்மா டாப் 30 போட்டியாளர்களில் ஒருவராக ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் நீச்சல் உடை சுற்றில் அவர் தேர்வாகவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Miss Mexico 🇲🇽
— Martín 👁✨ (@martinangelh) November 21, 2025
Fátima Bosch is the new #MissUniverse 2025pic.twitter.com/4rTYUjFdoo
சர்ச்சை
சர்ச்சைக்கு பின் கிடைத்த மகுடம்
பாத்திமா போஷ் இந்த மாத தொடக்கத்தில் ஒரு பெரிய சர்ச்சையை எதிர்த்து மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வென்றார். பாத்திமா இரண்டு வாரங்களுக்கு முன்பு போட்டியிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஒரு போட்டோ ஷூட் நிகழ்வின்போது மிஸ் யுனிவர்ஸ் தொகுப்பாளரான நவத் இட்சராகிரிசில் அவரை பகிரங்கமாக விமர்சித்தார். அமர்வின் லைவ்ஸ்ட்ரீமில், நவத், மிஸ் மெக்சிகோவை குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் தேவையான விளம்பர உள்ளடக்கத்தை வெளியிடத்தவறியதாக கூறப்படும்போது, அவரை "Dumb Head" என்று அழைத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த பாத்திமா, நிகழ்வை புறக்கணிப்பதாக கூறினார். அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து சக அழகிகளும் வெளிநடப்பு செய்தனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவர் சர்ச்சைகளை தாண்டி அழகி மகுடம் வென்றிருப்பது சுயமரியாதைக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.