Miss Universe 2025: இந்தியாவின் மனிகா விஸ்வர்கர்மா வெளியேறினார்; டாப் 12-க்கு தகுதி பெறவில்லை
செய்தி முன்னோட்டம்
தாய்லாந்தில் நடைபெற்று வரும் 74வது மிஸ் யூனிவர்ஸ்(Miss Universe 2025) இறுதிச் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்தியப் பிரதிநிதி மனிகா விஸ்வகர்மா, டாப் 12 சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அவர் டாப் 30 போட்டியாளர்களில் ஒருவராக ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மனிகா விஸ்வகர்மா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர், டெல்லியில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் பட்டப்படிப்பை பயின்று வருகிறார். இவர் மிஸ் யூனிவர்ஸ் ராஜஸ்தான் 2024 பட்டத்தை வென்றவர். டாப் 12 போட்டியாளர்கள் நீச்சல் உடை சுற்றுக்கு பின்னர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சிலி, கொலம்பியா, கியூபா, குவாடலூப், மெக்சிகோ, புவேர்ட்டோ ரிக்கோ, வெனிசுலா, சீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மால்டா மற்றும் கோட் டி ஐவோயர் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தேர்வாகியுள்ளனர்.
சர்ச்சை
சர்ச்சைகள் நிறைந்த போட்டி
இந்த ஆண்டுப் போட்டி பல சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக, நிகழ்ச்சியை நடத்திய நவாட் இட்சாராக்ரிசில் (Nawat Itsaragrisil), மெக்சிகோ பிரதிநிதியை பொதுவில் "அறிவில்லாதவர்" (Dumbhead) என்று கூறியதால், அவர் மேடையை விட்டு வெளியேறினார். மேலும், ஒரு நடுவருக்கும் ஒரு போட்டியாளருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு மூன்று நடுவர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதற்கிடையே மிஸ் யூனிவர்ஸ் 2026 போட்டி, அதன் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், Puerto Rico-வில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மிஸ் யூனிவர்ஸின் இறுதி போட்டியினை அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பார்க்கலாம்.