இந்த வாரம் ZEE5 இல் 'குடும்பஸ்தன்' ஒளிபரப்பாகிறது
செய்தி முன்னோட்டம்
ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படமான 'குடும்பஸ்தன்', தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது.
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கிய இந்தப் படம், மணிகண்டனின் யதார்த்தமான நடிப்பினால், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதன் ஆன்லைன் திரையிடல் குறித்த பல ஊகங்களுக்குப் பிறகு, மார்ச் 7 வெள்ளிக்கிழமை ZEE5 இல் படம் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும் என்று இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள்
'குடும்பஸ்தன்' OTT வெளியீடு தள்ளிபோனதன் காரணம்
முன்னதாக, குடும்பஸ்தன் திரைப்படம் OTT தளங்களில் பிப்ரவரி 28, 2025 அன்று திரையிடப்படும் என்று திட்டமிடப்பட்டது.
இருப்பினும், வெளியீட்டுத் தேதி பின்னர் தள்ளிப்போனது.
தற்போது Zee 5 இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
அதன் சமூக வலைத்தளத்தில் இதற்க்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
கதைக்களம்
'குடும்பஸ்தன்' கதைக்களம்
குடும்பஸ்தனின் கதை- ஓடிப்போய் முதல் குழந்தையை எதிர்பார்க்கும் நவீன் மற்றும் வெண்ணிலா தம்பதியினரின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது.
இந்தப் படம் அந்த தம்பதிகளின் போராட்டம், ஏமாற்றம், தோல்வி, இறுதியாக, நல்லிணக்கம் ஆகியவற்றை பேசுகிறது.
நவீனின் வாழ்க்கை, வேலை இழப்பு, நிதி சிக்கல்கள் மற்றும் உறவுச் சிக்கல்களை அவர் சமாளிக்கும் விதம், அதே நேரத்தில் தனது வீட்டைப் புதுப்பிப்பது, தனது தாயின் பயணத்திற்கு நிதியளிப்பது மற்றும் அவரது கர்ப்பிணி மனைவியின் UPSC கனவுகளை நிறைவேற்றுவதன் அழுத்தம் போன்றவற்றை காட்டுகிறது.
படக்குழு
'குடும்பஸ்தன்' படக்குழு
குடும்பஸ்தன் இயக்குனர்-எழுத்தாளர் காளிசாமி மற்றும் எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோரின் கூட்டு முயற்சியாகும்.
இந்தப் படத்தை எஸ். வினோத் குமார் தயாரித்துள்ளார், ஒளிப்பதிவாளர் சுஜித் என். சுப்பிரமணியம், படத்தொகுப்பு: கண்ணன் பாலு, இசை: வைசாக்.
நவீனாக மணிகண்டனும், ராஜேந்திரனாக குரு சோமசுந்தரமும், R சுந்தராஜன் பழனிச்சாமியாகவும் (நவீனின் தந்தையாக), சான்வே மேகனா, வெண்ணிலாவாகவும் (நவீனின் மனைவி) மற்றும் குடச்சநாடு கனகம் நவீனின் தாயாகவும் நடித்துள்ளனர்.