NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு 
    மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு

    மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 30, 2023
    06:29 pm

    செய்தி முன்னோட்டம்

    மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன், திங்கள்கிழமை (அக்டோபர் 30) ​​திருவனந்தபுரத்தில் உள்ள தனது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 35.

    இது தற்கொலையாக இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், தற்போது நடிகரின் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரெஞ்சுஷாவின் கணவர் மனோஜ் ஸ்ரீலகம் கூட மலையாள திரைப்படவுலகில் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது மனைவி ரெஞ்சுஷாவின் தற்கொலை குறித்து, மனோஜ் போலீசில் அளித்த வாக்குமூலத்தின் படி, காலையில் மனோஜ் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டதாகவும், அங்கிருந்து, தனது மனைவியை தொலைபேசியில் அழைக்க முயற்சித்தும் பதிலளிக்காததால், வீட்டிற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.

    வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தன்னுடைய மனைவி, ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் என்பதை அறிந்ததாகவும் கூறியுள்ளார்.

    card 2

    ரெஞ்சுஷா மேனனின் திரை பயணம்

    கொச்சியைச் சேர்ந்த ரெஞ்சுஷா மேனன், நடிகராக காலடி எடுத்து வைக்கும் முன், பிரபல ரியாலிட்டி ஷோவான நட்சத்திரதீபங்கள் நிகழ்ச்சியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் .

    அதன் பின்னர், அவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து, மலையாள படங்களிலும் சிலவற்றில் நடித்துள்ளார்.

    காரியஸ்தன் , சிட்டி ஆஃப் காட் , மேரிக்குண்டொரு குஞ்சாடு , நிழலாட்டம் , தலைப்பாவ் , லிசம்மையுடே வீடு , மற்றும் வாத்தியார் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மலையாள படம்
    மலையாள திரையுலகம்
    நடிகைகள்
    தற்கொலை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மலையாள படம்

    படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல்  நடிகர்
    ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்  ஜெயிலர்
    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார் மலையாள திரையுலகம்

    மலையாள திரையுலகம்

    'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல் விஜய்
    படங்களை ரீமேக் செய்வது எனக்கு பிடிக்காது: துல்கர் சல்மான் துல்கர் சல்மான்
    தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி நடிகர்
    அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர் அமலாக்க இயக்குநரகம்

    நடிகைகள்

    அரசியல்வாதி மகனுடன் திருமணமா? நடிகை மேகா ஆகாஷின் தாய் விளக்கம் தனுஷ்
    சமூக ஊடக கணக்குகளில் இருந்து விலகுவதாக பாலிவுட் நடிகை கஜோல் அறிவிப்பு  பாலிவுட்
    சமந்தா ரூத் பிரபு தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளாரா? சமந்தா ரூத் பிரபு
    D50: தனுஷ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அபர்ணா பாலமுரளி  தனுஷ்

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025