
தருமபுரி அருகே சாலை விபத்தில் நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
செய்தி முன்னோட்டம்
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காலை தர்மபுரி அருகே கார் விபத்தில் சிக்கினர்.
அதில் அவரது தந்தை சிபி சாக்கோ(70) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், நடிகர் மற்றும் அவரது தாயார் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த நேரத்தில், ஷைன் தனது தாய், சகோதரர் மற்றும் தந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
ஷைனும் அவரது தாயாரும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு மருத்துவர்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது சகோதரருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 7 மணியளவில் தர்மபுரியில் உள்ள பாலக்கோட்டை அருகே அவர்களின் கார் லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
fdsf
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான ஷைன்
நடிகருக்கு ஷைனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமீபத்தில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்தார்.
அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரது சக நடிகை வின்சி அலோஷியஸ், 'சூத்ரவக்யம்' படப்பிடிப்பு தளத்தில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தார்.
ஷைன், 'அன்னையும் ரசூலும்', 'கம்மட்டிபாடம், 'கோதா', உள்ளிட்ட பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதுபோக, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் கடைசியாக 'குட் பேட் அக்லி' மற்றும் 'ஆலப்புழா ஜிம்கானா' ஆகிய படங்களில் நடித்தார்.