
PS2 குந்தவையின் போஸ்ட்டரை வெளியிட்ட படக்குழு; நந்தினியின் பேன்ஸ் வருத்தம்
செய்தி முன்னோட்டம்
பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, படத்தின் புதிய போஸ்ட்டரை படக்குழு இன்று வெளியிட்டது.
அதில், குந்தவை கதாபாத்திரம் இடம்பிடித்திருந்தது.
'நேர்த்தியும் சக்தியும் சங்கமிக்கும்' என தலைப்பிடப்பட்டிருந்தது.
இதை கண்ட நந்தினி கதாபாத்திரத்தின் ரசிகர்கள், பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
இரண்டாம் பாகத்தில், இரு வேடங்களில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்பது ட்ரைலரை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அதனால், நந்தினியின் போஸ்டர் வெளியிடப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு, தற்போது ஏமாற்றமே மிஞ்சியது.
இதனிடையே, பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை, ஏப்ரல் 21 அன்று குறிப்பிட்ட திரையரங்குகளில் ரீ -ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
குந்தவையின் போஸ்டர் வெளியானது
Elegance meets power.
— Madras Talkies (@MadrasTalkies_) April 5, 2023
Get ready to meet our #Kundavai in #PS2!
In cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam,andKannada!
ICYMI, watch #PS2Trailer
▶ https://t.co/vtlkJV9skk #CholasAreBack #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions… pic.twitter.com/vrpL8kFliw