மீண்டும் வருகிறான் சோழன்; பொன்னியின் செல்வன் -1 மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டம்
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. அதில் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியான நிலையில், இம்மாத இறுதியில் இரண்டாம் பாகம் வெளியாகப்போகிறது. இதனிடையே, பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை, ஏப்ரல் 21 அன்று குறிப்பிட்ட திரையரங்குகளில் ரீ -ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார். இந்த சூப்பர் செய்தியை வெளியிட்டது, 'சின்ன பழுவேட்டரையர்' பார்த்திபன். நடிகர் பார்த்திபன், மணிரத்னத்துடன் வாட்சப்பில் உரையாடிய போது, பார்வையாளர்கள் வசதிக்காக, படத்தின் முதல் பாகத்தை , இரண்டாம் பாகத்தோடு சேர்த்து வெளியிடலாமே என கேட்டதாகவும், அந்த யோசனையை ஏற்று, மணிரத்னம், வரும் ஏப்ரல் 21 , முதல் பாகத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வாட்சப் சாட்டின் ஸ்க்ரீன்ஷாட்டை, பார்த்திபன் ட்விட்டரில் பகிந்துள்ளார்.