பொன்னியின் செல்வன் 2 பாடல் வெளியீட்டு விழாவிற்கு போடபட்ட செட் வீடியோ வெளியானது
செய்தி முன்னோட்டம்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின், பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு பிரமாண்டமான முறையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், இரு தினங்களுக்கு முன்னர் (மார்ச் 29) மாலை நடைபெற்றது.
படத்தின் நாயகர், நாயகிகளுடன், தமிழக அமைச்சர் துரைமுருகன், உலக நாயகன் கமல்ஹாசன், சிலம்பரசன், மற்றும் 80 களின் ஹீரோயின்களான ரேவதி, குஷ்பு, ஷோபனா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழா வளாகத்தில், சோழ அரியணை போடப்பட்டிருந்தது. அதில் படத்தின் நாயகர்கள் ஒய்யாரமாக அமர்ந்து போஸ் கொடுத்தனர். அதன் பிறகு, அரண்மனை தாழ்வாரம் போன்று வடிவமைக்கப்பட்ட ரெட் கார்பெட் ஏரியா வழியாக நடந்து சென்று, அரங்கத்தின் மேடைக்கு செல்லும் வகையில் செட் போடப்பட்டிருந்தது.
பொன்னியின் செல்வன்
PS 2 ஆடியோ வெளியீட்டு விழா செட்
கண்கவரும் வகையில் அமையப்பட்டிருந்த அந்த செட், அமைப்பாளர், பிரபல கலை இயக்குனரும், நடிகருமான கிரண்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா படவுலகில் பல மொழிகளில் பணியாற்றியுள்ள கிரண், கோ, அனேகன் போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர்.
கிரண் இதுவரையில், கோ, போடா போடி, 3 , நானும் ரவுடி தான் போன்ற பல வெற்றி படங்களை தந்துள்ளார்.
இவர் இதுவரை 20 -க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
அவர் தற்போது வெளியிட்ட வீடியோவில், 'PS2AudioLaunchக்கு ரெட் கார்பெட்டிற்கு போட பட்ட செட்.. மணிரத்னம் சார் உடன் பணிபுரிய இப்படி ஒரு வாய்ப்பாவது கிடைத்ததே! அதற்கு நன்றி லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ்" என பதிவிட்டிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
PS 2 ஆடியோ வெளியீட்டு விழா செட்
Set for #PS2AudioLaunch Red carpet.. atleast get this chance work for #ManiRatnam sir 😍 . Thanks for this @LycaProductions @MadrasTalkies_ pic.twitter.com/yMAVwvzgZK
— drk.kiran (@KiranDrk) April 1, 2023