
ஆஸ்கருக்கு போட்டிக்கு செல்கிறது 6 தமிழ்த் திரைப்படங்கள்! எவை தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
ஆஸ்கார் விருதிற்கு, 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரைக்க பட்டுள்ளது.
அதன்படி, மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் X, தங்கலான் மற்றும் ஜமா ஆகிய 6 படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பப்பட உள்ளது.
இது தவிர, நாடு முழுவதும் 29 திரைப்படங்கள் விருதிற்கான பரிந்துரைத்து பட்டியலில் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிரண் ராவின் லாபட்டா லேடீஸ் என்கிற பாலிவுட் திரைப்படமும் ஆஸ்கார் விருதுகளுக்கான இந்தியாவின் நுழைவு பட்டியலில் உள்ளது என இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தேர்வுக் குழுவின் தலைவர் ஜானு பருவா அறிவித்துள்ளார்.
embed
Twitter Post
#BREAKING | ஆஸ்கருக்கு செல்கிறது 6 தமிழ்த் திரைப்படங்கள்! Watch Live : https://t.co/R8mtG0AHxQ pic.twitter.com/bOpAOJ285G— Sun News (@sunnewstamil) September 23, 2024
சர்வதேச அங்கீகாரம்
சர்வதேச அங்கீகாரங்களை குவிக்கும் தமிழ் திரைப்படங்கள்
ஏற்கனவே, பல சர்வதேச மேடைகளில் அங்கீகாரங்களையும், விருதுகளையும் தமிழ் திரைப்படங்கள் குவித்து வருகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி கதாநாயகனாக நடித்த கொட்டுக்காளி திரைப்படம் ஏற்கனவே, 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது.
இது 23 ஆகஸ்ட் 2024 அன்று விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.
மறுபுறம் மகாராஜா, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை வாரிக்குவித்தது.
உலகளவில் Netflixஇன் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா முதலிடத்தை பிடித்திருந்தததும் குறிப்பிடதக்கது.