சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார் இசைஞானி இளையராஜா
செய்தி முன்னோட்டம்
இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி, மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ தியேட்டரில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக இன்று லண்டன் புறப்பட்டார் இசைஞானி இளையராஜா.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், "இது ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய இசை விருந்தாக இருக்குமென்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை... இது என்னுடைய பெருமை அல்ல, இது நாட்டினுடைய பெருமை...இந்தியாவினுடைய பெருமை.. இன்க்ரீடிப்பில் இந்தியா போல, இன்க்ரீடிப்பில் இளையாராஜா" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Updates | "இது என்னுடைய பெருமை அல்ல. நம் நாட்டின் பெருமை"
— Sun News (@sunnewstamil) March 6, 2025
-சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி!#SunNews | #Ilaiyaraaja | @ilaiyaraaja pic.twitter.com/A8NAaxTDFj
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | "இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை..!"
— Sun News (@sunnewstamil) March 6, 2025
-சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் பேட்டி!#SunNews | #Ilaiyaraaja | @ilaiyaraaja pic.twitter.com/ieHcF5WoX1
விவரங்கள்
இசை நிகழ்ச்சி பற்றிய விவரங்கள்
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், இளையராஜா உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.
இந்த நிகழ்வின்போது இளையராஜா தனது பிரபலமான சில பாடல்களின் பிரத்யேக இசைக்குழு பதிப்புகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, இளையராஜா இந்த இசை நிகழ்ச்சியை அறிவிக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
அந்த பதிவில், "லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோ தியேட்டரில், முதல் இந்தியராக, எனது முதல் மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..தவறவிடாதீர்கள். வரலாறு நடப்பதைக் காண அங்கு இருங்கள்." என்றார்.
இசைநிகழ்ச்சிக்கு முன்னதாக அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தமிழக முதல்வர், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.