Page Loader
"என் படவாய்ப்புகளை கெடுத்தது..": மதயானைக்கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் பதிவு
மதயானைக்கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்

"என் படவாய்ப்புகளை கெடுத்தது..": மதயானைக்கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 07, 2024
02:08 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் விக்ரம் சுகுமாரன், கடந்த 2013ஆம் ஆண்டு 'மதயானைக்கூட்டம்' என்ற வெற்றி படத்தை தந்தவர். அதன் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே, நீண்ட இடைவேளைக்கு பின்னர், 2023 ஆம் ஆண்டு 'ராவணன் கோட்டம்' என்ற படத்தை இயக்கினார். இவர் இயக்குனர் பாலுமகேந்திரா உடன் கதை நேரம் மற்றும் ஜூலி கணபதி உள்ளிட்ட படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதுபோக வெற்றிமாறனின் 'ஆடுகளம்' படத்தின் வசனங்களையும் இவர் தான் எழுதியுள்ளார். இந்த நிலையில் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் இட்ட பதிவொன்று சர்ச்சையை தூண்டியுள்ளது.

மர்ம நபர்

வாய்ப்புகளை தடுத்து நிறுத்திய மர்ம நபர் யார்?

அதில், மதயானைக்கூட்டம் படத்திற்கு பின்னர் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என நினைத்திருந்த நேரத்தில், படவாய்ப்புகள் வராமல் இல்லை, அதை ஒரு நபர் தடுத்து நிறுத்தி வருகிறார் என்பதை அறிந்ததாக தெரிவித்தார். அந்த நபர் தான் திரைக்கு நடிகனாக அறிமுகம் செய்த நபர் என்பதை அறிந்ததும் கூடுதல் அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார். அந்த மர்ம நபர் விக்ரமின் எதிரியுடன் இணைந்து தன்னுடைய வாய்ப்புகளை தட்டி பறித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். விக்ரமின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. யார் அந்த மர்ம நபராக இருக்கும் என இணையத்தில் ரசிகர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post