Page Loader
டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது; வெளியான அறிவிப்பு
டாடா இயக்குனருடன் கைகோர்க்கும் லைகா

டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது; வெளியான அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2023
11:19 am

செய்தி முன்னோட்டம்

'சரவணன் மீனாட்சி' தொடர் புகழ், கவின் நடிப்பில் நேற்று (பிப்.,10 ) வெளியான திரைப்படம், 'டாடா'. அறிமுக இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை ஒலிம்பியா நிறுவனம் தயாரித்திருந்தது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த படத்தில், கவின் உடன் இணைந்து, K.பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் வெளியான முதல் நாளே, படத்தை பற்றி நேர்மறை விமர்சனங்கள் வெளியாயின. இந்நிலையில், படம் வெளியான முதல் நாளே, படத்தின் இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சியாக, அவரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

டாடா இயக்குனருடன் இணையும் லைகா