
கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படம், 400 திரையரங்குகளில் வெளியாகப்போகிறது என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
'சரவணன் மீனாட்சி' தொடர் புகழ், கவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம், 'டாடா'.
கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம், வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
பெரிய நடிகர்களின் படத்திற்கு நிகராக இந்த படம், 400 திரையரங்குகளில் வெளியாக போவதை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், படத்தை பற்றி பலரும் நேர்மறை விமர்சனங்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கவின் உடன் இணைந்து, K.பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ட்விட்டர் அஞ்சல்
டாடா திரைப்படம்
Kavin's #Dada Releasing in 400+ Screens in TN..💥 This is Huge..👌 Trailer Carries a Good Buzz too..⭐
— Laxmi Kanth (@iammoviebuff007) February 8, 2023
A New Star in the Making..??