Page Loader
AK 62 பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா நிறுவனம் தந்த அதிர்ச்சி
லைகாவின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது

AK 62 பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா நிறுவனம் தந்த அதிர்ச்சி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 16, 2023
02:22 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று லைகா நிறுவனம் தங்களது சமூக வலைத்தளத்தில், தங்களது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து, அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், லைகா நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பு.காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. லைகா நிறுவனத்தின், அடுத்த தயாரிப்பு, திருவின் குரல் என்று பெயரிடப்பட்ட திரைப்படம். இந்த படத்தில், அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா ஆகியோர் நடிப்பதாகவும், படத்தை, ஹரிஷ்பாபு இயக்கப் போவதாகவும், அந்த போஸ்டரில் வெளியிடப்பட்டது. அருள்நிதி தேர்வு செய்யும் படங்கள் அசத்தலாக இருக்கும் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது வரை அஜித்தின் அடுத்த திரைப்படம் பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வரவில்லை. மகிழ் திருமேனி தான் அவருடைய படத்தை இயக்குகிறார் என்ற தகவல் மட்டும் தினசரி கூறப்பட்டுவருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

திருவின் குரல் போஸ்டர்