
இந்தியன்-2 படத்தில் குறைக்கப்பட்ட காட்சிகள்; லைகா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
'இந்தியன் 2' படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இந்த தோல்விக்கு படத்தின் நீளமும், தேவையில்லாத காட்சிகளும் தான் முக்கிய காரணம் என ரசிகர்களும், விமர்சகர்களும் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது படத்திலிருந்து பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக லைகா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, 12 நிமிட காட்சிகள் படத்திலிருந்து வெட்டி வீசப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியான 'இந்தியன் 2' தற்போது வரை 150 கோடியை கூட வசூலிக்கவில்லை.
கமல்ஹாசன், SJ சூர்யா, ஷங்கர், அனிருத் என பல பெரிய பெயர்கள் இருப்பினும் திரையரங்குகளிலும் ஹவுஸ்-ஃபுல் காட்சிகள் இல்லை.
இந்த நிலையில் தேவையற்ற காட்சிகள் நீங்கி ட்ரிம் செய்யப்பட்ட புதிய 'இந்தியன் 2' எதிர்பார்த்த வசூலை எட்டுமா?
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Witness the enhanced version of #Indian2 🇮🇳✂️ Now presenting a streamlined edition trimmed by 12 min. Catch it in cinemas near you for a crisper experience! 💥@IndianTheMovie 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh #Siddharth @actorsimha @anirudhofficial @dop_ravivarman… pic.twitter.com/0reMKOvMIe
— Lyca Productions (@LycaProductions) July 17, 2024