ரஜினி நடிக்கும் 'தலைவர் 170' படத்திற்கு நடிகர்கள் தேவை என லைகா அறிவிப்பு
'ஜெய்பீம்' புகழ், இயக்குனர் ஞானவேல் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் அறிவிக்கப்பட்டவுடன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கப்போவதாகவும், ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும், ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் இணைவார் எனவும் பலதரப்பட்ட பேச்சுகள் கிளம்பின. இதனிடையே, இந்த திரைப்படத்தில் நடிக்க அனுபவம் வாய்ந்த நடிகர்-நடிகைகள் தேவை என இப்படத்தின் தயாரிப்பாளரான, லைகா நிறுவனம் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக நாடகத்துறையில், திரைப்பட பள்ளி/கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிஜவாழ்க்கையில் நடந்த ஒரு போலி என்கவுண்டர் சம்பவம் தான் கதையின் கரு என கூறப்படுகிறது.