கூட்டத்தில் ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ்
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் தற்போது இத்திரைப்படம் உலக அளவில், சுமார் 400 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
அனைத்து விஜய் ரசிகர்களும் இப்படத்தின் வெற்றியினை கொண்டாடி வருகிறார்கள்.
படக்குழுவினரும் படத்தின் வெற்றியினை கண்டு மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்நிலையில், படத்தினை காணவரும் ரசிகர்களின் வரவேற்பு படத்திற்கு எப்படி உள்ளது ? என்பதை நேரில் காண விரும்பிய லோகேஷ் கனகராஜ் கேரளா சென்றுள்ளார்.
லியோ
எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த லோகேஷ் கனகராஜ்
அதன்படி அவர் அங்கு ரசிகர்களை மட்டுமின்றி, பத்திரிகையாளர்களை சந்தித்தும் பேச திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய லோகேஷ் கனகராஜிற்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதனிடையே அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ஓர் பதிவினை செய்துள்ளார்.
அதில் அவர், 'உங்கள் அனைவரது அன்பிற்கும் நன்றி கேரள மக்களே. கூட்டத்தில் சிறிது காயம் ஏற்பட்டு விட்டது. அதனால் நடக்கவிருந்த 2 பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ள முடியவில்லை' என்றும்,
'நிச்சயம் உங்களை சந்திக்க மீண்டும் வருவேன்' என்றும் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர், 'அதுவரை இதே அன்பு மற்றும் வரவேற்போடு 'லியோ' படத்தினை ரசித்து கொண்டிருங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.