Loading...
இயக்குநர்கள் டூ கதாநாயகர்கள்: திரையை கலக்கும் 6 தென்னிந்திய முன்னணி இயக்குநர்கள்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர்கள் டூ கதாநாயகர்கள்: திரையை கலக்கும் 6 தென்னிந்திய முன்னணி இயக்குநர்கள்

எழுதியவர் Vasuki
Aug 09, 2026
06:34 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியத் திரையுலகில் திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்கள், கேமராவுக்குப் பின்னால் இருந்து மேடைக் வெளிச்சத்திற்கு வந்து நடிகர்களாகத் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இயக்குநர்களாக முத்திரை பதித்து, பின் நாயகர்களாகவும், வில்லன்களாகவும் களமிறங்கி வெற்றி கண்ட 6 முக்கிய தென்னிந்திய இயக்குநர்களை பற்றிப் பார்க்கலாம்.

கதாநாயகன் அவதாரம்

 தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர்கள்

லோகேஷ் கனகராஜ்: கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் 'கூலி' எனத் தொடர் பிரமாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், தேவதாஸ் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் டிசி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

பிரதீப் ரங்கநாதன்: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், பின்னர் லவ் டுடே திரைப்படத்தை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து மாபெரும் வர்த்தக வெற்றியைப் பெற்றார்.

தொடர்ந்து 2025-இல் வெளியான டிராகன் படத்தின் பிரமாண்ட வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய முன்னணி கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.

கதாநாயகன் அவதாரம்

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர்கள்

எஸ்.ஜே. சூர்யா: வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே போன்ற சூப்பர் ஹிட் ரொமாண்டிக் திரைப்படங்களை இயக்கிப் புகழ்பெற்ற எஸ்.ஜே. சூர்யா, பின்னர் நடிகராகத் தன்னை முழுமையாக உருமாற்றிக்கொண்டார்.

கதாநாயகனாக மட்டுமின்றி, ஸ்பைடர், மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறார்.

கே. பாக்யராஜ்: இயக்குநர் பி.பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அவரது திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கியவர் கே. பாக்யராஜ்.

பின்னர் தனக்கெனத் தனி திரைக்கதை பாணியை உருவாக்கி, சொந்தமாக எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துத் தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வால் தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி இயக்குநராகவும் நடிகராகவும் திகழ்ந்தார்.

ADVERTISEMENT

கதாநாயகன் அவதாரம்

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர்கள்

சுந்தர் சி: நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் வணிக ரீதியான வெற்றிப் படங்களை இயக்குவதில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் சுந்தர் சி.

தலைநகரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்த இவர், அதன்பின்னர் இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டையும் சம அளவில் திறம்படக் கையாண்டு வணிக ரீதியாகப் பல வெற்றித் படங்களைக் கொடுத்து வருகிறார்.

சமுத்திரக்கனி: நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா போன்ற சமூகப் பொறுப்புமிக்க வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராகத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கியவர் சமுத்திரக்கனி.

தொடர்ந்து வடசென்னை, டான், ஆர்ஆர்ஆர் (RRR) உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களில் தனது வலுவான நடிப்பை வெளிப்படுத்தி, இந்திய அளவிலான முன்னணி குணச்சித்திர நடிகராகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

ADVERTISEMENT