LOADING...
அடுத்த பான் -இந்தியா படத்திற்கு தயாராகும் லோகேஷ், அதுவும் பாலிவுட் நடிகருடன்!
அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸ்-ஐ தொடர்ந்து லோகேஷ் கனகராஜும் பாலிவுட்டில் தடம் பாதிக்கவுள்ளார்

அடுத்த பான் -இந்தியா படத்திற்கு தயாராகும் லோகேஷ், அதுவும் பாலிவுட் நடிகருடன்!

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2024
12:23 pm

செய்தி முன்னோட்டம்

இது ஹிந்தி சினிமாவில் தமிழ் சினிமா இயக்குனர்கள் முத்திரை பாதிக்கும் காலம் போலும். அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸ்-ஐ தொடர்ந்து லோகேஷ் கனகராஜும் பாலிவுட்டில் தடம் பாதிக்கவுள்ளார். அதுவும் பல விருதுகளை வென்று குவித்த பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர் கான் உடன். லோகேஷ் கனகராஜுடன் அமீர்கான் தனது அடுத்த படத்திற்காக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆகாசவாணியின் சமீபத்திய அறிக்கையின்படி, அமீர் கான், லோகேஷ் உடன் இணைந்து பான்-இந்தியா திட்டத்திற்காக பணியாற்ற ஆர்வமாக உள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமீர் கடைசியாக 2022 இல் வெளியான லால் சிங் சட்டாவில் நடித்தார். அதேபோல லோகேஷ் கனஜராஜ் லியோ படத்தை இயக்கி இருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் அமீர்?