Page Loader
"சஞ்சய் தத் என்னை அப்பா என்று அழைக்கச் சொன்னார்"- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி
சுமார் 270 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், லியோ திரைப்படம் மூலம் முதன் முதலில் தமிழில் அறிமுகமாகிறார்.

"சஞ்சய் தத் என்னை அப்பா என்று அழைக்கச் சொன்னார்"- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

எழுதியவர் Srinath r
Oct 13, 2023
04:05 pm

செய்தி முன்னோட்டம்

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், தன்னை 'அப்பா' என்று அழைக்க சொன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லியோ திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர் விஜய்யின் அண்ணனாக, 'அந்தோணி தாஸ்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தியா கிலிட்ஸ்க்கு(Indiaglitz) அளித்த பேட்டியில், சஞ்சய் தத்தை இயக்கியது குறித்து லோகேஷ் பேசி இருந்தார். சஞ்சய் தத்தை இயக்குவதற்கு முன், அவரை வேறு மாதிரி நினைத்திருந்ததாகவும், ஒரு இயக்குனராக, அவரின் நிஜ வாழ்க்கை ஆளுமையையும், அர்ப்பணிப்பையும் பார்த்து, தான் ஆச்சரியப்பட்டதாகும் கூறினார்.

2nd card

சஞ்சய் தத்துடன் பணியாற்றிய போது சுதந்திரமாக உணர்ந்தேன்

மேலும் பேசிய லோகேஷ் கனகராஜ், "நான் சஞ்சய் தத் சாருடன் வேலை செய்யும் போது, 'மாநகரம்' திரைப்படத்தில், ஸ்ரீ மற்றும் சந்தீப் உடன் வேலை செய்த போதிருந்த அதே சுதந்திரத்துடன் வேலை செய்தேன்." "அவரின் படங்கள் மற்றும் நேர்காணல்களை பார்த்து அவரை வேறு மாதிரியாக நான் நினைத்திருந்தேன். எனக்கு நானே, 'சஞ்சய் தத் நிறைய படங்களில் நடித்துள்ளார். அவரை இயக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்!' என சொல்லிக் கொண்டேன்" "எனினும் நான் கதை சொல்லிய உடன், அதில் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருந்ததை உணர்ந்தவர், மிகவும் மகிழ்ச்சி உற்றார்" என கூறினார்.

3rd card

சஞ்சய் தத்தின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியமடைந்த லோகேஷ்

சஞ்சய் தத்தின் அர்ப்பணிப்பு உணர்வை குறித்து பேசிய லோகேஷ், "அவர் 270க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இது அவருக்கு முதல் படம். அவர் கேஜிஎஃப்-இல் நடித்துள்ளார்" "அவர் சுலபமாக வசனங்களுக்கு வாய் அசைக்கிறேன் என சொல்லிருக்கலாம், ஆனால் அவர் என் உதவியாளர்களிடம் டியூசன் கற்பதை போன்று வசனங்களை மனப்பாடம் செய்வார்." "மனப்பாடம் செய்த வசனங்களை இரவு எனக்கு அனுப்பிவிட்டு தான், தூங்கச்செல்வார். ஒரு சில சமயங்களில் விடியற்காலை 2 அல்லது 3 மணி வரை கூட ஆகும். நான் அவரிடம் இந்த அர்ப்பணிப்பை எதிர்பார்க்கவில்லை." "அவர் என்னை 'மகன்' என்று அழைத்தார். என்னை, அவரை 'அப்பா' என அழைக்கச் சொன்னார். அவருடன் நான் இவ்வளவு நெருக்கமாவேன் என எதிர்பார்க்கவில்லை" என கூறினார்.