LOADING...
லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் பென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்

லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 03, 2025
07:43 pm

செய்தி முன்னோட்டம்

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களின் மூலம் ஒரு தனி சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவரின் 'கைதி' தொடங்கி கடைசியாக வெளியான லியோ வரை அனைத்துமே LCUவில் அடக்கம். இந்த நிலையில் அவரது தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் பென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் LCUவில் ஒரு பகுதி என ஏற்கனவே செய்தி வெளியாகிய நிலையில், இப்படத்தில் நிவின் பாலி வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. பென்ஸ் படத்தின் போஸ்டர் உடன் ராகவா லாரன்ஸ் இதைப்பற்றி ஒரு க்ளூ இன்று தந்துள்ளார். அதோடு, பென்ஸ் படத்தின் கதாபத்திரங்கள் வெளியீடு நாளை நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post