Page Loader
இந்த வாரம், வெள்ளித்திரையிலும், OTT தளத்திலும் வெளியாக போகும் படங்கள் என்னென்ன?
நாளை, விடுதலை திரைப்படமும், பத்து தல திரைப்படமும் வெளியாகிறது

இந்த வாரம், வெள்ளித்திரையிலும், OTT தளத்திலும் வெளியாக போகும் படங்கள் என்னென்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 29, 2023
07:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வாரம், இரு பெரும் படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அதுமட்டுமின்றி, தெலுங்கு நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தசரா' படமும் ரிலீஸ் ஆக போகிறது. பத்து தல: சிம்பு- கவுதம் கார்த்திக் நடிப்பில், ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் நாளை வெளியாகப்போகும் படம் இது. இந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான். கன்னட படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், சிம்புவிற்கு ஜோடி இல்லை என்பது கூடுதல் செய்தி. அவர் இதில் ஒரு டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விடுதலை: ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இந்த திரைப்படத்தில், சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் வெற்றிமாறன்.

தமிழ் திரைப்படங்கள்

OTT ரிலீஸ்

இந்த மாத துவக்கத்தில், வெளியான அயோத்தி மற்றும் அகிலன் திரைப்படங்கள், பரவலான வரவேற்பைப் பெற்றது. ஜெயம் ரவி நடிப்பில், கடல் வணிகம் தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஜெயம் ரவியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில், பிரியா பவானிஷங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்திருந்தனர். 'அயோத்தி' படத்திற்கு பெரிதாக விளம்பரம் செய்யவில்லை. காரணம், அதன் பட்ஜெட் தட்டுப்பாடு. எனினும், படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. இந்த இரு படங்களும், இம்மாத இறுதியில், மார்ச் 31 அன்று ஜீ 5 தளத்தில் வெளியாகிறது. இவற்றோடு, பிரபுதேவா நடித்துள்ள பகீரா திரைப்படமும் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் மார்ச் 31 வெளியாகப்போகிறது.