Page Loader
சினிமாவுலகில் தன்னை அவமதித்தவர்களை ஒதுக்கிய நடிகர் அஜித்
மனக்கசப்புகளை மறந்து இந்த பிரபலங்களுடன், அஜித் மீண்டும் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

சினிமாவுலகில் தன்னை அவமதித்தவர்களை ஒதுக்கிய நடிகர் அஜித்

எழுதியவர் Venkatalakshmi V
May 14, 2023
10:07 am

செய்தி முன்னோட்டம்

அஜித், அஜித்குமார், 'அல்டிமேட் ஸ்டார்' அஜித், தற்போது 'தல' அஜித் என ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த நடிகர், தானே சுயமாக உழைத்து முன்னேறியவர். ஆரம்ப நாட்களில் தன்னுடைய படங்களின் தோல்விகளினால், தன்னை அவமானபடுத்தியவர்களையும், தன்னை இழிவாக நினைத்தவர்களையும், அடையாளம் கண்டுகொண்ட பிறகு, இன்றுவரை அவர்களுடன் இணைந்து பணிபுரியவே இல்லை அஜித். அவரின் பின்னால் அவதூறு பேசியவர்கள், தற்போது அவருடைய கால்ஷீட்டிற்காக காத்திருந்தாலும், அஜித் அவர்களை நெருங்க விடுவதில்லை என்கிறது செய்திகள். அப்படி அஜித்தால் நிராகரிக்கப்பட்ட பிரபலங்களின் பட்டியல் இதோ: நிக் ஆர்ட்ஸ், SS சக்ரவர்த்தி: இவர் தயாரிப்பில் அல்லாமல், வேறு தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க அஜித் ஓகே சொன்ன காரணத்தால், சக்ரவர்த்தி கடுமையாக பேசிவிட, அன்றுமுதல் இவர்கள் தயாரிப்பில் அஜித் நடிப்பதில்லையாம்.

card 2

அஜித்தின் நிராகரிப்பு பட்டியலில் உள்ள பிரபலங்கள் 

கலைப்புலி S தாணு: ஆரம்பநாட்களில், பைக் ரேஸில் முதுகெலும்பில் ஆபரேஷன் செய்தபோது, இனி அஜித் ஹீரோவாக நடிக்க முடியாது என கமெண்ட் அடித்தாராம் தாணு. அந்த விஷயம் அஜித்திற்கு தெரியவர, மிகவும் கஷ்டப்பட்டு, வலியோடு, கையில் இருந்த படங்களை எல்லாம் வெற்றிகரமாக நடித்து முடித்தாராம். உடல்நலம் தேறிய பின்னர், இன்று வரை, தாணு தயாரிக்கும் படங்கள் என்றால், உடனே மறுத்து விடுகிறாராம் அஜித். ஏ.ஆர். முருகதாஸ்: 'தீனா' என்ற வெற்றி படத்தின் மூலமாகதான் 'தல' அஜித் ஆனார். இருப்பினும் அவரின் அடுத்த படமான 'மிரட்டல்'க்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, 'கஜினி' படம் எடுக்க போய்விட்டார் முருகதாஸ். அதனால், இன்று வரை அவருடன் எந்த படமும் நடிக்கவில்லை அஜித்.