அஜித் பிறந்தநாள்: அன்று 'ராசியற்ற நடிகர்', இன்று 'தல' ஆனதன் ரகசியம்!
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித்தின் 52-வது பிறந்தநாள் இன்று. அவரை ரசிகர்கள் 'தல' என கொண்டாடுகிறார்கள். அதற்கு பின்னர் அவரின் விடாமுயற்சியும், தன்னை தானே செதுக்கிக்கொண்ட கதையும் உண்டு.
தமிழ் திரைப்பட ரசிகன், அவரை 'தல' என கொண்டாடுவதன் பின்னணியில், அவர் நடித்த படத்தின் கதாபாத்திரங்கள் மட்டும் காரணம் அன்று. அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த, செய்யும் பல விஷயங்கள், ரசிகனை ஈர்த்ததனால்.
அவை என்னவென்று பார்க்கலாம்.
சினிமா வேறு; வாழ்க்கை வேறு: அஜித்குமார் தனது தொழிலான சினிமாவையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்து வைத்துள்ளார். பொதுவெளியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதே இல்லை. அவரை தவிர, அவரது குடும்பத்தினர் பற்றி ஊடங்கங்களுக்கு பரவலாக எதுவும் தெரியாது.
card 2
அஜித்தின் கொள்கைகள், இன்றைய தலைமுறையின் வாழ்க்கை பாடங்கள்
விமர்சனங்களை கண்டு கலங்காமல் இருப்பது: அஜித் மீது, பலமுறை எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் கண்டுகொள்வதே இல்லை. தன்னுடைய வேலையை அது பாதிக்காதவாறு பார்த்து கொள்கிறார்.
நோ மொபைல்: அஜித்குமாருக்கு தனியாக செல்போன் கிடையாது. அவரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவரின் மேனேஜர் மூலமாகதான் பேச வேண்டும். மொபைல் போனில் வெட்டி பேச்சு பேசி, நேரத்தை கடத்தும் இளம் தலைமுறையினருக்கு, அதை முற்றிலுமாக தவிர்க்கும் அஜித், ஒரு ரோல் மாடல் தான்.
மனதின் வேட்கையை கைவிடாமல் தொடர்வது: அஜித்திற்கு பைக் ரேஸிங் மிகவும் பிடித்த விஷயம். அதை இன்றளவும் ஏதேனும் ஒரு வகையில் கடைபிடிக்கிறார். சாகச பயணங்கள், துப்பாக்கி சுடுதல், வேர்ல்ட் டூர் என தனது விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்.