
லியோ: 'டௌ டௌ டௌ ஃபீவர்' பாடல் வீடியோவை வெளியிட்டது ஸ்பாட்டிபை
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வெறியோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 22ஆம் தேதி, அவர் நடித்துள்ள 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'நா ரெடி' பாடல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இந்த பாடலை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு ஒரு வீடியோவை ஸ்பாட்டிபை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ஸ்பாட்டிபை, "ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. டௌ டௌ டௌ ஃபீவரில் இருந்து தப்பிக்கவே முடியாது" என்று தெரிவித்துள்ளது.
"டௌ டௌ டௌ" என்பது 'நா ரெடி' பாடலில் வரும் வரிகளாகும்.
மேலும், இன்று இந்த பாடலுக்கு இசையமைத்த அனிருத்தின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்பாட்டிபை வெளியிட்ட 'டௌ டௌ டௌ ஃபீவர்' வீடியோ
Odavum mudiyathu oliyavum mudiyathu. You just can’t escape the Tow Tow Tow fever 🕺@anirudhofficial @Dir_Lokesh @AsalKolaar pic.twitter.com/uKde8edl02
— Spotify India (@spotifyindia) October 16, 2023