அமெரிக்காவில் 'லியோ' திரைப்படம் - ஸ்க்ரீனை கிழித்த நபரால் பரபரப்பு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'. இப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் தற்போது இத்திரைப்படம் உலகளவில், சுமார் 400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் மறுபுறம் இப்படத்திற்கு மோசமான விமர்சனங்களும் கூறப்பட்டு தான் வருகிறது. படத்தின் முதல்பாதி ஓரளவு ஓகே என்றும், இன்ட்ரவலுக்கு பிறகு படம் படு மோசம் என்றும், கதையில் அந்தளவு வலு இல்லை என்றும் மக்கள் அவரவர் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவில் 'லியோ' திரைப்படத்தினை திரையரங்கில் பார்த்து கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென எழுந்து சென்று ஸ்க்ரீனை தாறுமாறாக கிழித்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.