Page Loader
சென்னையில் லியோ திரைப்பட டிக்கெட் முன்பதிவில் தாமதம் 
சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் திரையரங்கங்கள் லியோ திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் லியோ திரைப்பட டிக்கெட் முன்பதிவில் தாமதம் 

எழுதியவர் Srinath r
Oct 14, 2023
11:27 am

செய்தி முன்னோட்டம்

அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், சென்னையில் திரையரங்குகள் லியோ திரைப்படம் வெளியாக ஒப்பந்தம் செய்யாததால் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சினிமா திரைப்பட வியாபாரத்தில் விநியோகப் பகுதியில் பிரிக்கப்பட்டு விநியோகஸ்தர்களுக்கு திரைப்படம் விநியோகிக்கப்படும். அந்த வகையில் லியோ திரைப்படத்திற்கான சென்னை விநியோகிஸ்த உரிமையை 'கற்பக விநாயகா' என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம், திரையரங்க உரிமையாளர்களிடம் முதல் வார வசூலில் 70% கேட்பதாகவும், அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட விநியோக நிறுவனம்- திரையரங்குகள் இடையே பேச்சு வார்த்தை முடிவுறாத நிலையில், திரையரங்குகள் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

திரைப்பட விநியோகஸ்தர்- திரையரங்குகள் இடையே ஷேர் தொகை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது