சாண்டி மாஸ்டரின் புதிய ஆல்பமிற்காக லோகேஷ் கனகராஜ் கேமியோ
செய்தி முன்னோட்டம்
நடிகரும், நடன இயக்குனருமான சாண்டி மாஸ்டரின் புதிய 'பாஸ்ட் இஸ் பாஸ்ட்' என்ற பாடலில், லியோ இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் அசத்தியுள்ளார்.
நான்கு நிமிட பாடலில், முதல் 40 நொடிகளுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.
இப்பாடல் குறித்து செய்தி வாசிக்கும் ஃபாத்திமா பாபு உடன், லோகேஷ் கனகராஜ் செய்தித்தாள் படித்துக்கொண்டே உரையாடுவது போன்று அந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வைசாக் இசையமைத்து, வரிகள் எழுதி, பாடியுள்ள இந்தப் பாடலை, திங்க் மியூசிக் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வந்தாலும், 'லியோ' திரைப்படம் சாண்டி மாஸ்டருக்கு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று, ரன்னர் அப் ஆக வெற்றிபெற்றிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
சாண்டி மாஸ்டர் நடித்துள்ள 'பாஸ்ட் இஸ் பாஸ்ட்' பாடல் வீடியோ வெளியானது
Past is padt Out now ! 🕺🏻 https://t.co/tajDmygUHU
— vaisagh (@VaisaghOfficial) October 26, 2023