
லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது
செய்தி முன்னோட்டம்
'லெஜெண்ட்' சரவணன், இயக்குனர் ஜோடி JD - ஜெர்ரி இயக்கத்தில், 'லெஜெண்ட்' திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
தன்னுடைய கடைக்கான விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்த 'லெஜெண்ட்' சரவணன், திரைத்துறையில் கால் பதிக்கவே, 'லெஜெண்ட்' படத்தை தயாரித்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் வருமென அவர் காத்திருந்தார். அதற்காக பல கதைகளை அவர் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். "இவ்வளவு நாள் ஒரு நல்ல கதை அமைய வேண்டும் என்பதற்காக காத்திருந்ததாகவும் தற்போது அந்த கதை கிடைத்துவிட்டது எனவே விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்" என அந்த வீடியோவில் கூறியுள்ளார், 'லெஜெண்ட்'.
ட்விட்டர் அஞ்சல்
லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்
அடுத்த படத்தின் அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த
— Legend Saravanan (@yoursthelegend) August 15, 2023
தருணம்#Legend #Legendsaravanan @yoursthelegend pic.twitter.com/LocspXpDuX