திரையுலகமே திரண்டு வந்த, மறைந்த இயக்குனர் KV ஆனந்த் வீட்டு திருமணம்
சிறந்த ஒளிப்பதிவிற்காக, முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவர், மறைந்த இயக்குனர் KV ஆனந்த். இவர் மலையாள திரைப்படமான 'தேன்மாவின் கொம்பத்து' மூலமாக தான் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கண்களை உறுத்தாத வண்ணங்கள், அதே நேரத்தில் பளிச்சென்ற காட்சியமைப்புகள் போன்றவை KV ஆனந்தின் திறமையை பறைசாற்றும். 'காதல் தேசம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நுழைந்தவர், பின்னர் தொடர்ச்சியாக நேருக்கு நேர், முதல்வன், சிவாஜி என பல வெற்றி படங்களில் பணிபுரிந்துள்ளார். இயக்குனர் ஷங்கரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்த இவரை, தயாரிப்பாளர் தேனப்பன் தான் இயக்குனர் ஆக்கினார். தொடர்ந்து, அயன், கோ, அனேகன், மாற்றான் மற்றும் காப்பான் என வெற்றிப்படங்களை இயக்கினார்.
கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட திருமணம்
இப்படி பல வெற்றி படங்களை இயக்கிய KV ஆனந்த், கடந்த 2021-ம் ஆண்டு,கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு சினேகா, சாதனா என இறந்து மகள்கள் உள்ளனர். அதில், இளையவரான சாதனவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, திரையுலத்தின் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், திருமண விழா நடைபெற்றது. KV ஆனந்தின் மகள் சாதனா, ஒரு ஆர்கிடெக்ட். அவர் திருமணம் செய்து கொண்ட மணமகனும் ஒரு கட்டடக்கலை வடிவைப்பாளார் தான் என செய்திகள் தெரிவிக்கின்றன.