Page Loader
சைலண்டாக 9 படங்களில் நடிக்கிறாரா நயன்தாரா?
நயன்தாரா நடிப்பில் வெளியாக போகும் படங்களின் பட்டியல்

சைலண்டாக 9 படங்களில் நடிக்கிறாரா நயன்தாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2023
01:38 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு O2 என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடிக்க போவதாகவும் அறிவிப்பு வந்தது. எனினும், சமீப காலமாக நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக எதுவும் வெற்றி பெறவில்லை. கடைசியாக கனெக்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனாலும், நயன்தாராவிற்கு திரையுலகில் இன்னும் மவுசு குறையவில்லை எனதான் கூற வேண்டும். ஊடக செய்திகளின் படி, நயன்தாரா தற்போது கிட்டத்தட்ட 9 படங்களில் நடித்து வருகிறாராம். அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானுடன் 'ஜவான்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஹிந்தி, தமிழ் என பலமொழிகளில் வெளியாகவிருக்கிறது. படப்பிடிப்பிற்காக அவ்வப்போது மும்பைக்கு பறந்துகொண்டிருக்கிறார் நயன்.

நயன்தாரா

தொடர்ந்து படங்களில் கமிட் ஆகும் நயன்தாரா

இதனையடுத்து, ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அஹ்மத் இயக்கும் அந்த படத்திற்கு பெயர் 'இறைவன்' என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 'நயன்தாரா 75' என தற்காலமாக பெயரிடப்பட்ட படத்தின் அறிவிப்பும் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில் ஜெய்யுடன் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவைமட்டுமில்லாமல், விக்னேஷ் சிவன் இயக்கப்போகும் படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க போவதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதேபோல, ராகவலரன்ஸ் நடிக்கும் ஒரு திரைப்படம், தயாரிப்பாளர் சசிகாந்த், இயக்குனராக அவதாரம் எடுக்கப்போகும் புதிய படம், நிவின் பாலி நடிக்கும் ஒரு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும், துரை செந்தில் குமாரின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத படங்கள் 6-இல் நயன்தாரா நடிப்பில் உருவாக போகிறது.