Page Loader
23 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் விஜய்யின் 'குஷி' திரைப்படம்
23 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் விஜய்யின் 'குஷி' திரைப்படம்

23 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் விஜய்யின் 'குஷி' திரைப்படம்

எழுதியவர் Nivetha P
May 19, 2023
03:33 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரைப்படங்கள் சிலது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மனதை விட்டு மறையாது. அதுபோன்ற ஓர் அழகிய காதல் திரைப்படம் தான் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களுள் ஒன்று 'குஷி', விஜய், ஜோதிகா என்பதைவிட சிவா, ஜென்னி என்னும் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை பதிந்துள்ளது. ஈகோ என்னும் ஒற்றை வார்த்தையினை கதைக்களமாக கொண்டு ஒரு முழு நீள காதல் திரைப்படம் எடுக்க முடியுமானால், அது இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவால் மட்டுமே சாத்தியம்.

குஷி 

வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட 'குஷி'

இப்படத்தின் மற்றொரு பலமாக அமைந்தது தேவாவின் இசையாகும். 23 ஆண்டுகள் கடந்தும் குஷி படத்தின் பாடல்களுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. ஜோதிகாவின் துறுதுறுப்பான நடிப்பும், விஜய்யின் மனதை தொடும் ரியாக்க்ஷன்களுமே இப்படத்தின் உயிராக அமைந்திருக்கும். சண்டை போட்டுக்கொண்டேவும் கூட காதலிக்கலாம் என்பதற்கு இப்படம் ஒரு சான்று. தமிழில் வெளியாகி பெருமளவில் ஹிட்டான இத்திரைப்படம் பின்னர் பிற மொழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட்டது. தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெவ்வேறு நடிகர் நடிகைகளை கொண்டு எடுக்கப்பட்டது. குறிப்பாக தெலுங்கில் பவன் கல்யாண்-பூமிகா வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பெருமளவில் ஹிட் ஆகி தெலுங்கு ரசிகர்கள் மனதினையும் கவர்ந்தது.