Page Loader
பிரபாஸுடன் 'திருமண நிச்சயதார்த்தம்' பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்துள்ள நடிகை க்ரிதி சனோன்
பிரபாஸுடன் 'திருமணம்' பற்றிய வதந்திக்கு பதில் அளித்த நடிகை

பிரபாஸுடன் 'திருமண நிச்சயதார்த்தம்' பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்துள்ள நடிகை க்ரிதி சனோன்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2023
05:32 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் பிரபாஸுடன் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்க போவதாக கூறப்பட்ட நடிகை க்ரிதி சனோன்.0 'ஆதிபுருஷ்' என்கிற ஹிந்தி திரைப்படத்தில் இருவரும் தற்போது நடித்துவருகிறார்கள். இந்த படத்தின் மூலம் இருவரும் காதல் கொண்டதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுவரை, இந்த வதந்திகளுக்கு பதிலளிக்காமல் இருந்த இருவரும், தற்போது இந்த திருமண செய்தியை மறுத்துள்ளனர். க்ரிதி சனோன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு 'கிரிப்டிக்' பதிவையும் இட்டுள்ளார். மறுபுறம், பிரபாஸின் தரப்பு, "பிரபாஸ் மற்றும் க்ரிதி இருவரும் நண்பர்கள் மட்டுமே. அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான செய்திகள் உண்மையல்ல", எனக்கூறியுள்ளனர். இதற்கு முன்னரும், பிரபாஸ், நடிகை அனுஷ்காவுடன் திருமணம் என்ற வதந்தியில் சிக்கியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

வதந்திகளுக்கு பதிலளித்த க்ரிதி சனோனும், பிரபாஸும்