
'பாகுபலி' நடிகர் பிரபாஸிற்கு திருமணம் நிச்சயமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
செய்தி முன்னோட்டம்
'பாகுபலி' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பிரபாஸ். அதனை தொடர்ந்து அவர் நடித்த சாஹோ, ராதே ஷியாம் போன்ற படங்களும் தமிழில் வெளியாயின.
அவர் தற்போது, 'ஆதிபுருஷ்' என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரபாஸ்க்கும், நடிகை அனுஷ்காவிற்கும் காதல் என தெலுங்கு படவுலகில் கிசுகிசுக்கப்பட்டது. எனினும், இருவரும் அதை மறுத்து வந்தனர்.
இந்நிலையில், ஹிந்தி நடிகை க்ரிதி சனோனுடன் காதலென்றும், இருவருக்கும், விரைவில் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் எனவும், ட்விட்டர் வாடிக்கையாளர் ஒருவர் இட்ட பதிவின் வெளிப்பாடு தான், இந்த அதிர்ச்சி அலை.
எனினும், இந்த தகவலில் உண்மையில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
பிரபாஸ் நிச்சயதார்த்தம்
BREAKING NEWS: #KritiSanon #Prabhas will get engaged next week in Maldives 🇲🇻!! So Happy for them.
— Umair Sandhu (@UmairSandu) February 5, 2023