Page Loader
குரங்கு பெடல் படத்தின் 'கொண்டாட்டம்' பாடல் வெளியானது

குரங்கு பெடல் படத்தின் 'கொண்டாட்டம்' பாடல் வெளியானது

எழுதியவர் Sindhuja SM
Apr 27, 2024
06:36 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயரிப்பில் உருவாகி வரும் குரங்கு பெடல் படத்தின் 'கொண்டாட்டம்' பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் குரங்கு பெடல் என்ற படத்தை வழங்க உள்ளதாக முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. மதுபானக்கடை மற்றும் வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமலக்கண்ணன் சுப்ரமணியன் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர். குரங்கு பெடலில் ராகவன், எம். ஞானசேகர், ரத்தீஷ், சாய் கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். காளி வெங்கட் தந்தை கேரக்டரில் நடிக்கிறார். பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் பிரசன்னா பாலச்சந்தர் மற்றும் ஜென்சன் திவாகர் ஆகியோரும் இப்பட்ட்டத்தில் நடித்துள்ளனர். இப்படம் மே 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

 'கொண்டாட்டம்' பாடல் வெளியானது