
திருநங்கை கெட்டப்பில் மாஸாக நடித்த நடிகர்களின் விவரம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் சிலர் எந்தவித மறுப்பும் இன்றி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டனர். இது குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகர் விக்ரம்: பல கெட்டப் போட்டு நடிப்பதை அசால்ட்டாக செய்பவர் சியான் விக்ரம். ஓரிரு படங்களில், பெண் வேடத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், 'இருமுகன்' படத்தில் முழுமையாக திருநங்கை வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த இவர், திருநங்கை வில்லனாக நடித்தார்.
நடிகர் விஜய் சேதுபதி: 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஷில்பா என்கிற திருநங்கையாக நடித்திருந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் அழியா இடத்தை பிடித்தார்.
Transgender role in cinema
காஞ்சனா படத்தை இயக்கி நடித்திருந்த லாரன்ஸ் திருநங்கையாக ஒரு சில காட்சிகளில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
நடிகர் ஜெயம் ரவி: இளம் பெண் ரசிகர்களின் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி 'ஆதி பகவான்' திரைப்படத்தில் திருநங்கையாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இந்த சவாலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை படத்தில் வெளிப்படுத்தினார்.
நடிகர் சரத்குமார்: காஞ்சனா படத்தில் எதார்த்தமான நடிப்பை திருநங்கை வேடத்தில் நடித்து விருதுகளை வாங்கி குவித்தார். இவரது இந்த கதாபாத்திரத்தை பாராட்டாத ஆட்களே இருக்க மாட்டார்கள்.
நடிகர் பிரகாஷ் ராஜ்: 2000 ஆம் ஆண்டு வெளியான 'அப்பு' திரைப்படத்தில் திருநங்கையாக மட்டும் இன்றி வில்லனாகவும் நடித்து அப்போதே பாராட்டுகளை குவித்தார்.