Page Loader
கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?
இயக்குனர் பேரரசு

கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2023
03:22 pm

செய்தி முன்னோட்டம்

கீழடி அகழ்வாராய்ச்சி தளத்தில், பண்டைய பொருட்களுக்கு ஒரு அருங்காட்சியகத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த அருங்காட்சியகத்தில், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும், பண்டைய கலை பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியா நாகரீக வளர்ச்சியை பறைசாற்றும் பல அரிய வகை பொருட்களை அங்கே காணலாம். அதை காண, பல நகரங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். சமீபத்தில் கூட, நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, அவர்களது குழந்தைகள் மற்றும் நடிகர் சிவகுமாருடன் அங்கே வருகை தந்திருந்தார். தமிழ் மொழியில், சிவகுமாருக்கு இருக்கும் ஈடுபாடு பலரும் அறிந்திருப்பார்கள். அதனால், அவர்கள் குடும்பத்தாருடன் வந்திருந்தனர்.

கீழடி

அருங்காட்சியகத்தை திறக்க சொல்லி போராட்டம்

இந்நிலையில், தற்போது கோடை விடுமுறையாகையால், பல பள்ளி, கல்லூரி மாணவர்கள், கீழடி அருங்காட்சியகத்திற்கு நேற்று (ஏப்ரல் 8) வந்திருந்தனர். அந்த மக்களுடன், இயக்குனர் பேரரசுவும் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தார். ஆனால், அங்கே வந்த பிறகு தான் தெரிந்தது, நேற்று அருங்காட்சியகத்திற்கு விடுமுறை என்று. இதனால், ஆத்திரம் அடைந்த பேரரசு, அருங்காட்சியகத்தை திறக்க சொல்லி போராட ஆரம்பித்தார். இதனை அறிந்த ஊடகத்துறையினரும் அங்கே கூட்டமாக வந்துள்ளனர். விஷயத்தை கேள்விப்பட்ட, அந்த தொகுதியின் MP யான சு.வெங்கடேசன், அதிகாரிகளிடம் பேசி, மக்களை உள்ளே அனுமதிக்க ஆவண செய்தார். நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு, அரசு விடுமுறையாகையால், அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. இதை அறியாத மக்கள், கூட்டமாக வந்து போராடினர் என்கின்றனர். அருங்காட்சியக அலுவலர்கள்.