NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆஸ்கார் விருதுகள் 2023: இந்தியாவில் இந்த விழாவை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்?
    பொழுதுபோக்கு

    ஆஸ்கார் விருதுகள் 2023: இந்தியாவில் இந்த விழாவை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்?

    ஆஸ்கார் விருதுகள் 2023: இந்தியாவில் இந்த விழாவை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்?
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 13, 2023, 05:00 am 1 நிமிட வாசிப்பு
    ஆஸ்கார் விருதுகள் 2023: இந்தியாவில் இந்த விழாவை எப்போது, ​​எங்கு  பார்க்கலாம்?
    ஆஸ்கார் விழாவின் ஸ்ட்ரீமிங் விவரங்கள்

    உலகெங்கிலும் உள்ள சினிமா பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் ஒருசேர ஆவலுடன், இந்த மதிப்புமிக்க விருது வழங்கும் விழாவிற்கு தயாராகி வருகின்றனர். ஆம், 95வது அகாடமி விருதுகள் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவிலிருந்து இம்முறை மூன்று திரைப்படங்கள் ஆஸ்கார் விருதிற்கு தேர்வாகி இருப்பது, கூடுதல் மகிழ்ச்சி. "எவெரிதிங், எவெரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" என்ற திரைப்படம் தான் கிட்டத்தட்ட 11 பிரிவுகளில் போட்டியிடுகிறது. RRRன் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே பல அரங்குகளில் விருதுகளை குவித்துள்ள நிலையில், தற்போது அந்த பாடல் விருதை தட்டி தூக்குமா என்பதை விரைவில் தெரிந்து விடும். இப்படி எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இந்த விருது விழாவை எங்கே எப்போது பார்க்கலாம் என்பது குறித்த விவரங்கள் இதோ:

    ஆஸ்கார் லைவ்

    Find out how you can watch the 95th Oscars LIVE on Sunday, March 12th at 8e/5p! #Oscars95 https://t.co/OGDntiA2Hw

    — The Academy (@TheAcademy) March 11, 2023

    நேரலை விழாவின் ஸ்ட்ரீமிங் விவரங்கள்

    ஆஸ்கார் விருதுகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெறும். இந்த விழா அமெரிக்காவில் மார்ச் 12 இரவு நடைபெறுவதால், இந்திய நேரப்படி, (மார்ச் 13) இன்று காலை 5:30 மணிக்கு நேரலையில் பார்க்கலாம். இந்த விழாவை, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக காணலாம். அதோடு, HULU டிவி, யூடியூப் டிவி, Fubo டிவி மற்றும் AT&T டிவியிலும் ஒளிபரப்பப்படும். இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு முதல், பார்வையற்றவர்களுக்கு, கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கெனவும் பிரத்தியேகமாக வசதி செய்யப்பட்டுள்ளதாக 'அகாடமி' அறிவித்துள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், மூன்று படங்கள் தேர்வாகி உள்ளது மட்டுமன்றி, மேலும் சில பெருமை பட கூடிய தருணங்கள் உள்ளது. பிரபல நடிகையான தீபிகா படுகோன், நிகழ்ச்சி தொகுப்பாளராக தேர்வாகி உள்ளார்.

    ஆஸ்கார் லைவ்

    Celebrating the 95th Oscars this Sunday is now more accessible for blind and low vision audiences through live AD provided by @DescribedVideo.

    Televised LIVE on ABC, tune in at 6:30e/3:30p for the Red Carpet and 8e/5p for the main show. #Oscars95 pic.twitter.com/jOAPWlv2Yw

    — The Academy (@TheAcademy) March 11, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    ஆஸ்கார் விருது

    சமீபத்திய

    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள் இந்தியா
    மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா நயன்தாரா

    இந்தியா

    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI ரிசர்வ் வங்கி
    இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது? வருமான வரி விதிகள்

    ஆஸ்கார் விருது

    கருமுட்டைகளை சேமித்து வைத்த பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி  பாலிவுட்
    உலக நடன தினம்: வித்தியாசமான நடன அசைவுகளினால், பிரபலமடைந்த பாடல்கள் தமிழ் திரைப்படங்கள்
    ஜூனியர் NTR -ஐ இயக்க ஆசைப்படும் 'கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி' இயக்குனர்  தமிழ் திரைப்படம்
    இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் 50வது பிறந்தநாள் இன்று பிறந்தநாள்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023