Page Loader
விவசாயிகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஹெச்.வினோத்; உறுதியானதா KH233 திரைப்படம்?
விவசாயிகளுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் H.வினோத்

விவசாயிகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஹெச்.வினோத்; உறுதியானதா KH233 திரைப்படம்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 13, 2023
08:34 am

செய்தி முன்னோட்டம்

நடிகரும், ம.நீ.ம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று 'நெல் ஜெயராமன் நெல் பாதுகாப்பு' நிர்வாகிகளை நேரில் சந்தித்தார். அப்போது அவருடன், இயக்குனர் ஹெச்.வினோத்தும் உடனிருந்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர், "பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் விவசாயிகளுடன் துணை நிற்பேன்" என்றும், "வரும் ஜூன் 17-18 அன்று நடைபெறும் தேசிய நெல் திருவிழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என அறிக்கை விடுத்தார் கமல். இந்த நிகழ்வில் H.வினோத்தும் கலந்துகொண்டதையடுத்து, கமலை இவர் அடுத்து இயக்குவது உறுதியாகியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. கமலின் 233 வது படமான இந்த திரைப்படம், விவசாயிகளை பற்றியதாக இருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. 'இந்தியன் 2' படத்திற்கு பிறகு, கமல், H.வினோத்துடன் இணைவார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

விவசாயிகளை சந்தித்த கமல்ஹாசன்