Page Loader
நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்; வலுக்கும் கண்டனம்
தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்; வலுக்கும் கண்டனம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2023
06:03 pm

செய்தி முன்னோட்டம்

சூரரை போற்று படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி, சமீபத்தில் கேரளாவில், ஒரு சட்டக்கல்லூரி விழாவில் பங்கு பெற்றார். 'தங்கம்' படத்தின் விளம்பரத்திற்காக, அபர்ணாவுடன், இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் சிலர், பங்கு பெற்றனர். அப்போது, மேடை மேலே ஏறிய மாணவர் ஒருவர், அபர்ணாவிடம் கை குலுக்கினார். தொடர்ந்து, அவருடன் புகை படம் எடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு சம்மதித்த அபர்ணா, எழுந்து நின்றதும், அவர் தோளின் மேலே கை போட்டார். அதிர்ச்சி அடைந்த அபர்ணா, விலகி நின்றார். புகைப்படம் எடுத்து சென்ற அம்மாணவர் மீண்டும் அபர்ணாவிடம் பேச முயன்றார். ஆனால் அபர்ணா மறுத்து விட்டார். தற்போது வைரலாகி உள்ள இந்த வீடியோ, பலத்த கண்டனத்தை ஈர்த்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகையிடம் அத்துமீறிய மாணவன்