இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு (IFFI) தேர்வாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படம், கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், காடுகள் மற்றும் விலங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் தற்போது, இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
Twitter Post
25 வணிகம் சார்ந்த படங்கள் திரையிடப்படவுள்ளது
இந்திய சர்வதேச திரைப்பட விழா, 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இந்திய சினிமாவை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த வருடம் விழா கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்திய பனோரமா பிரிவு (வணிகம் சார்ந்த திரைப்படம்) பிரிவில் மொத்தம் 384 போட்டியிட்டதில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', கல்கி 2898 AD, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம், 35 சின்ன கதா காடு உள்ளிட்ட 25 படங்கள் தேர்வாகியுள்ளன. இந்த திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் நடித்த 'சாவர்க்கர்' திரைப்படம் திரையிடப்படுகிறது. வணிக அம்சம் இல்லாத திரைப்படங்கள் பிரிவில் 20 படங்கள் தேர்வாகியுள்ளது.