
கார்த்தியின் 'வா வாத்தியார்' டீசர் வெளியானது: கவரும் கதாபாத்திரங்கள் மற்றும் இசை!
செய்தி முன்னோட்டம்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள புதிய திரைப்படம் 'வா வாத்தியார்' படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தில், கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். டீசர் மொத்தமும் வசனங்கள் இன்றி வெறும் இசையாலேயே நகர்வது கூடுதல் சுவாரசியம்.
டீசரில் அறிமுகம் செய்யப்பட்ட ஆனந்த் ராஜின் 'எம்ஜிஆர்' கெட்டப்பும், சத்யராஜின் வித்தியாசமான தோற்றமும், எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரணின் காட்சியும் ரசிக்கும்படி அமைந்துள்ளன.
இதில் நம்பியார் ரெஃபரன்ஸ் ஒன்று உள்ளதால், அது ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.
'வா வாத்தியார்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.
தற்போது, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
A colorful and massy entertainer with a twistu from Nalan Kumarasamy! Here’s the #VaaVaathiyaar teaser!https://t.co/Lh1jfMHb7a@StudioGreen2 @gnanavelraja007 @IamKrithiShetty @Music_Santhosh #Rajkiran #Sathyaraj #ShilpaManjunath #Karunakaran @george_dop @KiranDrk #ANLArasu…
— Karthi (@Karthi_Offl) November 13, 2024