உறவுகளின் ஆழத்தை பேசும் கார்த்தியின் மெய்யழகன் ட்ரைலர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
'96 திரைப்படத்தில், ராம் (விஜய் சேதுபதி), ஜானு (த்ரிஷா) இருவருக்குமிடையே இருக்கும் காதல் எனும் உறவை சிறிதும் முகம் சுளிக்காமல், அழகாக எடுத்திருந்தார் பிரேம் குமார்.
அதேபோல, மெய்யழகன் படத்திலும் அத்தான்- மச்சான் இருவருக்கிடையே இருக்கும் உறவினை ஒரு இரவில் நடக்கும் கதையாக எடுத்துள்ளார்.
கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது.
96 படத்தை போலவே இப்படவும் கிராமத்து மண் வாசனை மாறாமல் எடுக்கப்பட்டிருக்கிறது என அதன் ட்ரைலர் வெளிக்காட்டுகிறது.
பின்னணியில் கமல் ஹாசனின் குரலில் பாடல் ஒலிக்க, ட்ரைலர் பார்ப்பவர்களின் மனதை கரைக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Experience a life of innocence, joy and many emotions 💖
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 23, 2024
Step into the world of #Meiyazhagan 🤍#MeiyazhaganTrailer | மெய்யழகன் முன்னோட்டம்
▶️ https://t.co/U2DViU6yYY#MeiyazhaganFromSep27 🌾 மெய்யழகன் - புரட்டாசி 11 முதல்@Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl… pic.twitter.com/xZ7W3HGylC
ரிலீஸ்
தேவரா vs மெய்யழகன்
இந்த வாரம் திரையரங்குகளில் மெய்யழகன், தேவரா, பேட்ட ராப், சட்டம் என் கையில், தில் ராஜா மற்றும் ஹிட்லர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இதில், ஜூனியர் NTR, ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகவுள்ள தேவரா மற்றும் மெய்யழகன் படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படம் பாராட்டுகளை பெற்ற நிலையில், அந்த படம் இந்த வாரம் மேலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2டி நிறுவனம் தயாரித்த சர்ஃபிரா திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், மெய்யழகன் திரைப்படம் 2டி நிறுவனத்திற்கு காப்பாற்றும் என நம்பிக்கை உள்ளது.