மெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்; இதுதான் புது ரிலீஸ் தேதி
செய்தி முன்னோட்டம்
'96 படத்தை இயக்கிய பிரேம்குமார், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தமிழில் இயக்கிய படம் 'மெய்யழகன்'. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்,
அவர் உடன், அரவிந்த் சாமி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படம், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி திரைக்கு வந்தது. முன்னதாக அக்டோபர் 25-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்கிணங்க, 'மெய்யழகன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அக்டோபர் 27 என் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 'மெய்யழகன்' வரும் அக்டோபர் 27-ஆம் தேதி வெளியிடப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
2 Hrs 38 Mins | Uncut Version ❌ | Netflix💥#Meiyazhagan pic.twitter.com/oN9bkuOWJC
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 22, 2024