
பாலிவுட் மாபியா குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகை கங்கனா ரணாவத்
செய்தி முன்னோட்டம்
நடிகை கங்கனா, பாலிவுட் நடிகர்களையும், இயக்குனர்களையும் தொடர்ந்து சாடி வருகிறார். 'நெபோட்டிசம்' குறித்தும், பாலிவுட்டில் நிலவி வரும் மாபியாக்கள் குறித்தும், அவ்வபோது சர்ச்சையான கருத்துக்களை கூறி வருவார்.
தற்போது, ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய அவர், திரையுலகில், தான் எதற்காக ஒதுக்கப்படுகிறார் எனக்கூறியுள்ளார்.
"நான் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். மதிப்பு குறைவான, எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்று எனது தாயார் கற்றுத்தந்துள்ளார். இது ஆணவமா அல்லது நேர்மையா என்று சொல்லுங்கள். நான் மற்ற பெண்களை போல் கிசுகிசுக்கள் எதிலும் சிக்குவது இல்லை. திருமண விழாக்களில் நடனமாடுவது இல்லை, ஐட்டம் டான்ஸ் ஆடுவதில்லை, மற்றவர்களைப்போல் இரவில் ஹீரோக்கள் அறைகளுக்கு சென்று உரையாடுவது இல்லை. இதனால் தான் இந்தி சினிமா மாபியாக்கள் என்னை ஒதுக்குகிறார்கள்'' என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
கங்கனா ட்வீட்
Is this attitude or integrity? Khud ko sudharne ki jageh woh mujhe sudharna chale hain, lekin chakkar yeh hai ki mujhe apne liye kuch bhi nahi chahiye, maine abhi apna sab girvi rakh ke ek film banayi hai, rakshashon ka safaya hoga heads will roll, no one should blame me 🙏
— Kangana Ranaut (@KanganaTeam) February 27, 2023